Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நீட் குறித்து நடிகர் விஜயின் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில்

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள பாஜக நிர்வாகி இல.கண்ணன் இல்ல திருமண விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று அவரது வீட்டிற்கு வந்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்….. பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து இன்று மாலை எங்களது கூட்டணியின் சார்பில் அனைவரும் ஒன்று சேர்ந்து விக்கிரவாண்டியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இடைத்தேர்தல் என்றாலே எப்போதும் ஆளும் கட்சி உடைய ஆதிக்கம் அதிகம் இருக்கும். அதனை நாம் தற்போது விக்கிரவாண்டியில் பார்க்க முடிகிறது. ஒரு இடைத்தேர்தல் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

A டீம் என்கிற திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் B.டீமாக இருக்கக்கூடிய அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் இருக்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் வாயிலாக இதனை மறுபடியும் அவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். நடிகர் விஜய்யின் கருத்து குறித்து…. கருத்து சொல்வது அவரவர் சுதந்திரம் அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். கள்ளக்குறிச்சி விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும் என நம்புகிறோம் கள்ளக்குறிச்சியை பொருத்தவரை அது கள்ளச்சாராய கொலை என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆதாரத்தின் அடிப்படையில் நீட் யாருக்கும் எதிரானது அல்ல என்பதனை 2016 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் தொடர்ந்து நிருபித்து வருகிறோம். ஆதாரத்தின் அடிப்படையில் நீட் யாருக்கும் எதிரானது இல்லை என்பது தான் எங்களுடைய கருத்து. மூன்று முறை திமுக இதுவரை சட்டப்பேரவையில் நீட்டுக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்கள் ஆனால் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட என்ன பிரச்சனை என்பது தான் என்னுடைய கேள்வி? அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஒரு கருத்து கூறும் போது அறிவியல் பூர்வமாக ஆதாரத்துடன் அதனை வெளியிடுவது தான் சரியாக இருக்கும்.

பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக நீட்டை காரணமாக வைத்து வண்டியை ஓட்டி விடுகிறார்கள். 2016 ஆம் ஆண்டு முதல் மமதா பானர்ஜி நீட் தேர்வை எதிர்க்கவில்லை இன்று இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் என்ற காரணத்தால் மட்டுமே அவர் நீட்டை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் பேசி வருகிறார். திமுக எடுத்திருக்கிற கொள்கை முடிவை சார்ந்து விஜய் தன்னுடைய அரசியலில் பயணிப்பாரே ஆனால் தமிழகத்தில் பாஜக மட்டும் தனித்து நிற்கும்

பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் மட்டும் தனித்திருக்கும் அது எங்களுக்கு இன்னும் சந்தோசம் தான். அரசியல் கட்சித் தலைவராக விஜய் உடைய கருத்தை நான் வரவேற்பேன் என்று தான் சொல்ல வேண்டும் – ஏனென்றால் எங்களுக்கு அது நல்லது. புதிய கல்விக் கொள்கை முதலாவது மும் மொழிக் கொள்கையை எடுத்துரைக்கிறது – மும்மொழிக் கொள்கை இல்லை என திமுக காரர்கள் யாராவது சொன்னால் அது முற்றிலும் தவறு

2020 வரை இந்தியாவில் முதல் கல்விக் கொள்கை இரண்டாவது கல்வி கொள்கை என இரண்டுலுமே இந்தியை கட்டாயம் என்று தான் வைத்து இருந்தார்கள் ஒருவேளை திமுக அதனை கடைபிடிக்காமல் இருக்கலாம் – தமிழக அரசு கடைபிடிக்காமல் இருக்கலாம் அது வேறு. ஆனால் தற்போது கொண்டு வந்துள்ள கல்விக் கொள்கையில் தான் இந்தியை ஆப்ஷனல் என்று தெரிவிக்கிறார்கள். மாநில அரசின் கல்விக் கொள்கையில் கடலோரப் பகுதிகளில் மீன் பிடிப்பது சார்ந்தும் நாட்டிககன் மயில், படகுகக் போன்ற பல விஷயங்களை சொல்லிக் கொடுப்பதாக கூறுகிறார்கள் ஏன் இது குல கல்வி அல்லவா ?

உருது சார்ந்த படிப்பை அதிகம் கொண்டு வர வேண்டும் – பள்ளிகளை உருவாக்க வேண்டும் என கூறி இருக்கிறார்கள் இது உருது தினிப்பு இல்லையா? தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவரும் திராவிட முன்னேற்றக் கழகம் கூறுகிறார்கள். 2024ல் புதிய கல்விக் கொள்கையில் தமிழை பயிற்று மொழியாக கொண்டு வர வேண்டும் என்று இது இத்தனை காலமாக இல்லை.

அதிமுகவை பொறுத்தவரை அந்த கட்சி அழிவதற்கு பல பேர் காரணம் என்றால் ஜெயக்குமார் முதல் காரணம். காலையிலும் மாலையிலும் லுங்கி கட்டிக்கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பை வைத்தால் ஜெயக்குமார் அரசியல் செய்துவிட முடியுமா?பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்க வேண்டாம் என விமர்சனம் செய்யும் சு.வெங்கடேசன் மதுரை மேயர் கையில் செங்கோலை எதற்கு வழங்கினார் ? 

என் மீது மோசமான ஒரு விமர்சனத்தை திமுக ஆர் எஸ் பாரதி வைத்திருந்தார் அவர் மீது நான் வழக்கு தொடுத்திருக்கிறேன். ஒரு கோடி ரூபாய் அபராதம் கேட்டிருக்கிறேன். அதுவும் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக – எனவே இந்த defamation கேசை நானே நேரடியாக நீதிமன்றம் சென்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போகிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை திருநெல்வேலி மட்டுமல்ல எல்லா மேயர்களையும் நீக்கிவிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் அந்த மேயர் அலுவலகத்திற்கு அழகு சேரும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *