தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுக்கான நலச் சங்க துவக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த துவக்க விழாவிற்கு தமிழக உரிமை பெற்ற துப்பாக்கி உரிமையாளருக்கான நல சங்கத்தின் மாநில தலைவர் வரதராஜன் வரவேற்புரை ஆற்றினர்.
திருநெல்வேலி மனநல ஆய்வு வாரியம் தலைவர் ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி செந்தில் குமரேசன் தலைமை தாங்கினார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் ஈரோடு பங்களா டிரஸ்டி ஹாஜி முகமது அலி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த துவக்க விழாவில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த துப்பாக்கி உரிமம் வைத்திருந்தவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் விழாவின் இறுதியாக தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளருக்கான நல சங்கத்தின் மாநில செயலாளர் கௌரவ முனைவர் முகமது அக்பர் நன்றியுரை ஆற்றினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments