திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சைமலையில் உள்ள வண்ணாடு ஊராட்சி நாகூரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக துறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று நாகூரில் வசித்து வரும் காமராஜ் என்ற கண்ணன் (37) என்பவரது வீட்டை ரக சியமாக கண்காணித்தனர். நேற்று திடீரென்று அவரது வீட்டை சோதனை செய்தனர்.
அப்போது, அங்கு சாராயம் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. ஆனால் நீண்ட நாட்களாக அவருடைய தாத்தா பயன்படுத்திய ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கியை அனுமதியின்றி வைத்திருந்ததும், அதனை சட்டவிரோதமாக முயல் வேட்டைக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து காமராஜ் என்ற கண்ணன் மீது துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
Comments