தமிழ்நாடு அரசு ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பிறந்த நாள் கொண்டாட்டங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கேக் வெட்டுதல், பரிசளித்தல் போன்றவற்றை வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் உள்ள பிரபல ரவுடியான பட்டரை சுரேஷின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளிற்கு பரிசளிப்பதற்காக புதுக்கோட்டை மாத்தூர் வி எஸ் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவர் வாளை பரிசளிப்பதர்க்கு எடுத்து வந்த பொழுது அவரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவரிடம் இருந்து வாளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments