திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் சுப்பையா. இவரது மனைவி மீனாட்சி இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இன்று ஆதனூரில் நடக்கும் தனது உறவினர் வீட்டில் நடைபெற இருக்கும் கிரகப்பிரசதற்காக செல்வதற்கு மீனாட்சி வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 8 சவரன் எடையுள்ள ஆரம் மற்றும் நெக்லஸ் ஆகிய பார்த்தபொழுது நகைகள் திருடு போனது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த மீனாட்சி இது குறித்து துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகார் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments