திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக சௌந்தர பாண்டியன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வைத்து வருகிறார். இவருக்கும், திமுகவின் முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான நேருவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். மேலும் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் லெட்டர் கொடுத்ததாகவும், அப்போது முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர் நேருவையும், எம்எல்ஏ செளந்திர பாண்டியனையும் நேரில் அழைத்து சமரசம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் எம் எல் ஏ சௌந்தரபாண்டியன் தொடர்ந்து ஓரங்கட்டபட்டிருந்தார்.
மேலும் லால்குடியில் புதிய பேருந்து நிலையம், புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர் நேரு கடந்த மாதம் லால்குடியில் ஆய்வு செய்தார். அப்போது எம் எல் ஏ சௌந்தர பாண்டியனுக்கு முறையான தகவல் ஏதும் சொல்லப்படாததால் அவர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களை அமைச்சர் கே.என்.நேருவின் அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தார்.
இப்புகைப்படங்களுக்கு எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தான் இயற்கை எய்தி விட்டதாக பதிவு செய்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் பதிவிட்ட சில மணி துளிகளில் இப்பதிவு அகற்றப்பட்டு இருந்தது. இச்சூழலில் இன்று லால்குடி நகராட்சி நிர்வாகத்திற்கு 43 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் வாகனம் வழங்கப்பட்டது. அதற்கான சாவியை நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கத்திடம் வழங்கியிருந்தார். அதன் புகைப்படங்களை அமைச்சர் நேருவின் அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவேற்றம் செய்ய பட்டு இருந்தது.
இதில் லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன்….. மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் 11-10-2021 அன்று நான் தங்களிடத்தில் இலால்குடி நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்பதனை தங்களின் நினைவுக்கு கொண்டு வருகிறேன் நிறைவேற்றி தருவீர்களா என்று பதிவிட்டு, மக்கள் பிரச்சினைகளை அமைச்சர் நேருவுக்கு நினைவூட்டி உள்ளார்.
இந்த பதிவானது இன்னும் அமைச்சர் நேருவிற்கும், லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியனுக்கும் இடையே மன வருத்தம் தொடர்கிறது என்பதையும், திருச்சி மாவட்ட திமுகவிற்கு உட்கட்சி பூசல் இருப்பதை காட்டுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments