Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

219 கிராம வனக்குழுக்கள் மின் ஆளுமையின் கீழ் நவீன மயமாக்கும் பணி தீவிரம்

திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் 219 கிராம வன குழுக்கள் புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மின் ஆளுமையின் கீழ் நவீனமயமாக்குதல் பணி தீவிரமாக நடக்கிறது.

திருச்சிராப்பள்ளி வன மண்டலத்தில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய 7 வன கோட்டத்தில் 45 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரக எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் உலக வங்கி மற்றும் ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டு பல ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர்.

திருச்சியில் இன்று (12.07.2024) தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கிராம வன குழுக்களின் செயல்பாடுகளை மின் ஆளுமையின் கீழ் கொண்டு வருவது தொடர்பான முதற்கட்ட பயிலரங்கத்தில் அன்வர்தீன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு பல் உயிர் பெருக்க பசுமை திட்ட இயக்குனர் ஆலோசனையின் படி திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த பயிற்ச்சிக்கு திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா மற்றும் சுழல் மேம்பாட்டு அலுவலர் அன்பு திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்‌.

இப்பயிற்சியில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட சுமார் 45ற்கும் மேற்ப்பட்ட வனச்சரக அலுவலர்கள் கலந்து கொண்டு கிராம வனக் குழுக்களின் செயல்பாடுகளை நவீனமயமாக்கள் மற்றும் தகவல்கள் முழுமையாக கணினியில் ஏற்றப்பட்டு ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சி பெற்றார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி களக்காடு முண்டன் துறை புலிகள் காப்பாகம் என் ஜி ஓ ஜெனீத் கலந்து கொண்டு தனது கருத்துக்களை வழங்கினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி வனச்சரக அலுவலர் கோபிநாத் செய்திருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *