திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஏழு நிலைகளைக் கொண்ட கிழக்கு ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்று வருடாபிஷேக விழா நடைபெற்றது. உற்சவ மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், விபூதி, திரவியம், பழ வகைகள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால்
அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மஹா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மேள தாளம் முழங்க வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் கோயில் இணை ஆணையர் மற்றும் உபயதாரர் பொன்னர் சங்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments