திருச்சியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த தென்னூரை சேர்ந்த ஹமீத் (27) என்பவரின் வாகனத்தை சோதனை செய்ததில் அவரிடம் 1.150 கிலோ கஞ்சா இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஹமீதை கைது செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments