திருச்சியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, வீடுகளும் சேதம் அடைந்ததுள்ளது.
Advertisement
இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அளுந்தூர் ஊராட்சி தென்றல் நகர் பகுதியில் தொடர் மழையால் பதிக்கப்பட்ட பகுதியில் வீடுகள் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது.
Advertisement
தொடர்ந்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய செயலாளர் மாத்தூர் அ.கருப்பையா, அளுந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் SAS ஆரோக்கியசாமி, அம்மாபேட்டை காந்தி, சேதுராப்பட்டி தங்கரத்தினம் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன் ஆகியோரும் சென்றனர்.
Advertisement
Comments