திருச்சிராப்பள்ளி ரோட்டரி டைமண்ட் சிட்டி எலைட் சங்கம் சார்பில் ரோட்டரி மாவட்டம் 3000ன் ஆசை மகள் திட்டத்தின் கீழ் தாய் சேய் நலத்திற்காக மரக்கடையில் அமைந்துள்ள தென்னூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று வாராந்திர பரிசோதனைக்கு வந்த 30 கர்ப்பிணி பெண்களுக்கு மொத்தம் ரூ.10,000 மதிப்பிலான ஊட்டசத்து மிக்க உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் துணை ஆளுநர் ரொட்டேரியன் பார்த்தசாரதி, ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி டைமண்ட் சிட்டி எலைட் சங்கத்தின் தலைவர் முகம்மது நாசர், செயலாளர் ஜோசப்ராஜ், மற்றும் கெளதம், முகமதுரியாஸ், ஜீவானந்தன், சுப்பிரமணியன், மணிகண்டன் மற்றும் நகர்புற சுகாதார மையத்தின் மருத்துவர் பொன் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments