திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில், அதிமுகவினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். இதில் கொலை, கொள்ளை, உள்ளிட்ட நாள் தோறும் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து பட்டியலிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன்.செல்வராஜ், ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர் சுந்தர்ராஜ், திருவானைக்காவல் பகுதி கழக செயலாளர் திருப்பதி, வட்டக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments