திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் மீரா. இவரது வீட்டில் இன்று காலை ஒரு அறையில் புகை வந்ததைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது மின் கசிவு காரணமாக ஏசி-யில் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர் நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமாயின.
மேலும் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர்த்தப்பினர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments