திருச்சி மாவட்டம் புலிவலத்தைச் சேர்ந்த வர் நிவாஸ் (19). இவர் கடந்த (23.5.2024) திருச்சியில் நடை பெற்ற பேரரசர் பெரும்பிடு முத்தரையர் சதய விழாவில் பங்கேற்க சென்றார். அதற்காக இருசக்கர வாகனத்தின் தோற்றத்தை மாற்றி அதில் படுத்தவாறும், வீலிங் செய்த வாறும், பொதுமக்களுக்கு அச்சம் தரும் வகையில் ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது சம்மந்தமான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இதையடுத்து முசிறி தாலுகா மூவானூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்குப் பதிந்து நிவாஸை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இதையடுத்து திருச்சி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நிவாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி மணிமொழி துறையூரில் உள்ள முக்கியமான போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்து பிரிவு காவலர்களுடன் சேர்ந்து இரண்டு வாரங்களுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் இரண்டு மணி நேரம் என தினமும் 4 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். 30 நாட்களுக்கு புலிவலம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளின் பேரில் ஜாமீனில் நிவாஸை விடுவித்தார்.
நீதிமன்ற உத்திரவுபடி நிவாஸ் நேற்று முன்தினம் முதல் போக்குவரத்துப் காவலர்களுடன் இணைந்து துறையூரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியை செய்து வருகிறார். அவரது பணியை காணும் பொதுமக்கள் டூவீலரில் சாகசம் செய்யும் இளைஞர்கள் இதைப் பார்த்தாவது திருந்த வேண்டும். போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை இயக்கவேண்டும் என விமர்சனம் செய்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments