திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கோரிக்கை வைத்தது.
அதனை தொடர்ந்து கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு அதற்கு திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரி பேருந்து நிறுத்தம் என பெயர் வைக்கப்பட்டது. சமீப காலமாகவே சமூக விரோதிகள் அதனை சேதப்படுத்தும் நோக்கத்தில் மக்கள் வரிப்பணத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது.
திட்டமிட்டு இந்த செயல்களில் மதவாத கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டுகிறது. தமிழ்நாடு காவல்துறை உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments