திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு நோக்கி அரசு விரைவு பேருந்து இரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் மணல் ஏற்றி சென்ற டாரஸ் லாரியின் பின்னால் அரசு பேருந்து மோதிய விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை அறிந்து வந்த சிறுகனூர் போலீசார், காயமடைந்த பயணிகளை மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 10 நபர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறுகனூர் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments