திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு சென்ற அரசு பேருந்து கம்பரசம்பேட்டை அருகே உள்ள முருங்கபேட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுனர், முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து எதிரில் வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ சாலையில் கவிந்த நிலையில் சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சாலை அருகில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் 5 பேரும்ம் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் 5 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு ஆட்டோ ஓட்டுநர் அங்குராஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற நான்கு பேரும் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments