Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் சார்பில் நடைபெற உள்ள ஆன்தே-2024 (ANTHE) தேர்வுகள் அக்டோபர் மாதம் தொடக்கம்!

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் சார்பில் நடைபெற உள்ள ஆன்தே-2024 (ANTHE) தேர்வுகள் அக்டோபர் மாதம் தொடக்கம்!

தேர்வு தயாரிப்பு துறையில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆகாஷ் நேஷனல் டேலண்ட் ஹன்ட் தேர்வு 

(ANTHE – 2024) சமீபத்திய பதிப்பின் தொடக்கத்தை பெருமையுடன் அறிவித்துள்ளது. தனது 15 வது வெற்றிகரமான ஆண்டை கொண்டாடும் ஆன்தே சிறந்த சாதனையாளர்களை வளர்ப்பதில் மகத்தான சாதனை படைத்துள்ளது. பல ஆண்டுகளாக அதன் மாணவர்களில் பலர் NEET, UG மற்றும் JEE அட்வான்ஸ்டில் முதல் தரவரிசைகள் உட்பட மதிப்புமிக்க தேர்வுகளில் சிறந்து விளங்கியுள்ளனர். இந்நிலையில் இதன் அறிமுக விழா திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் எம்.டி தீபக் மெஹ்ரோத்ரா கலந்து கொண்டு “ஆன்தே-2024” தேர்வின் இலட்சினையை வெளியிட்டார். இந்நிகழ்வில் உதவி இயக்குநர் ராகவேந்திரா, கிளை தலமையாளர் குழந்தைவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து சி.இ.ஓ தீபக் மெஹ்ரோத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில்….

எண்ணற்ற மாணவர்களின் அபிலாஷைகள் மற்றும் திறன்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதில் ANTHE முக்கியப் பங்காற்றியுள்ளது. ANTHE இன் இந்த 15 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் உள்ள தகுதியான மாணவர்களுக்கு அவர்களின் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் எங்கள் கல்விச் சேவையை அவர்களுக்கு சென்று சேரும் வகையில் நாங்கள் உழைத்துள்ளோம். NEET மற்றும் IIT-JEE தேர்வுகளுக்கு மாணவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் சொந்த முயற்சியில் தயாராவதற்கு ANTHE உதவுகிறது. ANTHE 2024 இல் வலுவான பங்கேற்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி மாணவர்களை வழிநடத்த எதிர்நோக்குகிறோம். 

இந்தாண்டு 2024 -ன் ஆகாஷ் நேஷனல் டேலண்ட் ஹண்ட் எக்ஸாமில் (ANTHE) தேர்ச்சி பெறும் 5 சிறந்த மாணவர்கள், அமெரிக்காவின்

ப்ளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டருக்கு 5 நாள் அனைத்து செலவுகளும் உட்பட பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும் ப்ளோரிடாவில் அமைந்துள்ள ஜான் எஃப் கென்னடி விண்வெளி மையம், அமெரிக்காவில் உள்ள தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் (நாசா) பத்து கள மையங்களில் ஒன்றாகும்.

NEET, JEE, மாநில CET கள், NTSE மற்றும் ஒலிம்பியாட்ஸ் போன்ற தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் ஆகாஷின் விரிவான பயிற்சி திட்டங்களிலிருந்து ஆன்தே உதவி தொகை பெறுபவர்கள் பயனடைவார்கள். ஆன்தே 2024 தேர்வு அக்டோபர் 19, 27 வரை இந்தியாவில் உள்ள 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் நடைபெறும். 100% வரையிலான உதவித்தொகையுடன் கூடுதலாக முதன்மை மதிப்பெண் பெரும் மாணவர்கள் ரொக்கப் பரிசுகளையும் பெறுவார்கள். ஆன்தே ஆஃப்லைன் தேர்வுகள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 20 மற்றும் 27 ஆம் தேதிகளில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நாடு முழுவதும் உள்ள ஆகாஷ் இன்ஸ்டிடியூட்-ன் 315+ மையங்களில் நடத்தப்படும். ஆன்லைன் தேர்வுகள் அக்டோபர் 19 முதல் 27 வரை, தேர்வு நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். மாணவர்கள் அவர்களுக்கு ஏற்ற ஒரு மணி நேர ஸ்லாட்டை தேர்வு செய்யலாம்.

மாணவர்களின் கிரேடு மற்றும் ஸ்ட்ரீம் விருப்பங்களின் அடிப்படையில், ஒன்றுக்கும் மேற்பட்ட பல விருப்பத்தேர்வுகளை கொண்டிருக்கும் 40 கேள்விகளையும் மற்றும் அதற்கு மொத்தத்தில் 90 மதிப்பெண்களையும் கொண்ட தேர்வாக ஆன்தே நடத்தப்படும். VII-IX – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் மற்றும் அறிவுத்திறன் போன்றவற்றிலிருந்து கேள்விகள் இருக்கும். மருத்துவ கல்வி பயில விரும்பும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இருக்கும். அதே வகுப்பு பயிலும் மாணவர்கள் பொறியியலில் சேர விரும்புகிறபோது அவர்களுக்கான கேள்விகள் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் அறிவுத்திறன் ஆகிய பாடங்களிலிருந்து கேட்கப்படும். 

அதைப்போலவே நீட் தேர்வை எழுத விரும்பும் XI-XII மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவுகளிலும் மற்றும் பொறியியல் சார்ந்த தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் இருக்கும்.

ஆன்தே 2024 க்கான பதிவுப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆன்லைன் தேர்வு தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும், ஆஃப்லைன் தேர்வு தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பும் ஆகும். ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தேர்வுக்கான கட்டணம் ரூ.200 ஆகும். மாணவர்கள் 15 ஆகஸ்ட் 2024க்கு முன்பு பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்தில் 50% தள்ளுபடியைப் பெறலாம்  என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *