திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் பகுதியில் லால்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தது போலீசார் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் வாகனத்தை சோதனை செய்தனர்.
சோதனையில் அவர்களிடமிருந்த இரண்டு நாட்டு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் இவர்கள் மூவரும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ராமு என்கிற முரளி (48), அவரது மனைவி மகேஸ்வரி (37), இவர்களது உறவினரான சிவரஞ்சனி (48), என தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து உரிமம் இல்லாமல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இன்ஸ்பெக்டர் சரவணகுமார் இவர்கள் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளைச் சிறையில் அடைத்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments