தன்னாட்சி கல்லூரியின் 101வது விளையாட்டு விழா 26.07.2024 அன்று காலை 8 மணி அளவில் கோளாகலமாக கொண்டாடப்பட்டது. இறைவணக்கத்தினை தொடர்ந்த தமிழ்த்தாய் வாழ்த்தோடு விளையாட்டு விழா துவங்கியது.
விழாவின் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பதிவாளர் பேராசிரியர் திரு. ஆர். காளிதாசன் மற்றும் ராணுவ நடவடிக்கை பாதுகாப்பு அதிகாரி DSC Detachment OFT திரு. LT COL ஆனந்த் சார்ல்ஸ் அவர்களும் மற்றும் சிறப்பு அழைப்பாளர் NHPC நிறுவனத்தின் மேலாளர் ஸ்ரீமதி. நளினி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரைகள் ஆற்றி சிறப்பித்தனர்.
சுமார் 45 க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மாணவ மாணவிகள் வெற்றி கோப்பைகளை பெற்று சென்றனர். கல்லூரியின் 2024-ம் வருட கருப்பொருளான மனங்களை வலுப்படுத்தி சாதிக்கத்தக்க நிகழ்வுகளால் யுகங்கள் தோறும் இயற்கை இணை பராமரிக்க இணைவோம் என்ற கருத்தினை அடித்தளமாக கொண்டு மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாணவிகளின் அணிவகுப்பு துவக்க விழா நிகழ்வு புகையில்லா மின்சார வாகன பயன்பாடு என மாணவிகளின் எல்லா நிகழ்வுகளாலும் புனித சிலுவை தன்னாச்சி கல்லூரி மைதானம் வண்ணங்களால் நிரம்ப பெற்று விளையாட்டின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தனர் நாட்டுப் பன்னுடன் விழா இனிதே நிறைவுற்றது.
Comments