Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பள்ளிவாசல் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கும் தஞ்சை ரோடு அல்முஹம்மதியா பள்ளிவாசல் 45 ஆண்டுகளாக பள்ளிவாசல் சொத்துக்கள் கணக்கு காட்டாமல் பள்ளிவாசல் பணத்தை கொள்ளையடித்து வருகிறார் முத்தவல்லி முஹம்மது அன்சாரி என்பவரை எதிர்த்து ஜும்மா நேரத்தில் பள்ளிவாசல் கோபுரத்தில் ஏறி நிர்வாக மீட்பு குழு துணை செயலாளர் S.ரஃபீக் போராட்டம் நடத்தினர். சுமார் 45 நிமிடங்கள் பிறகு காவல்துறை மீட்டு சென்றனர். 

இதுக்குறித்து அவருடயை கோரிக்கை மனுவில்…….. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் மற்றும் தஞ்சை ரோடு பள்ளிவாசல் ஜமாத்தார்கள் பொது மக்களுக்கும் எனது அன்பான கோரிக்கை தெரிவித்துக் கொள்கிறேன்… தஞ்சை ரோடு நியூ மாஸ்க் வக்ஃப் (எ)அல்முஹம்மதியா பள்ளிவாசல் திருச்சி G.S .No.823

1) தஞ்சை ரோடு பள்ளிவாசல் 45 ஆண்டுகளாக நியமனம் உறுப்பினராக தேர்வு செய்யாமல் வந்தவர் தற்காலிக முத்தவல்லி முஹம்மது அன்சாரி மற்றும் முஹம்மது மைதீன் நீக்கம் செய்ய வேண்டும்.

2) 45 ஆண்டுகளாக தஞ்சை ரோடு பள்ளிவாசல் வரவு செலவு கணக்குகளை மஹல்லாவாசிகளிடம் நிர்வாகிகளாக இருந்தவர்களிடம் இது வரை பள்ளிவாசல் கணக்குகளை முறையாக காட்டியதில்லை தற்காலிக முத்தவல்லி முஹம்மது அன்சாரி மிக பெரிய ஊழல் நடந்துள்ளது இதை உடனடியாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.

3) தஞ்சை ரோடு வக்ஃப் செய்யப்பட்ட பள்ளிவாசல் தற்காலிக முத்தவல்லி பொய் சொல்லி பரம்பரை முத்தவல்லி என்று பள்ளிவாசல் நுழைவாயில் முன்பு இருக்கும் கல்வெட்டை நீக்க வேண்டும்.

4) KMB சார்ட்டபிள் டிரஸ்ட் ஒரு வருடங்களுக்கு முன்பு தனது சொந்த சொத்தாக மனதில் நினைத்துக் கொண்டு விளம்பரம் என்று பொய் சொல்லி மகளாசியிடம் ஏமாற்றிய பள்ளிவாசல் உள்ளே இருக்கும் சார்ட்டபிள் டிரஸ்ட் போர்டை நீக்க வேண்டும்.

5) தஞ்சை ரோடு நியூ மாஸ்க் வக்ஃப் பள்ளிவாசலை ஜும்மா பள்ளிவாசல் திருமண மண்டபம் கார்ப்பரேஷன் மருத்துவமனை இருந்த இடத்தை எல்லாம் வக்ப் செய்யாமல் மகளாவாசிகளை ஏமாற்றி தனது சொந்த இடம் என்று கூறி வருகிறார் அந்த இடம் பொதுமக்களிடமும் ஜமாத்தார்களிடம் வசூல் செய்து கட்டப்பட்டுள்ளது என்பது இந்த மகாவாசிகள் அனைவருக்கும் நன்கு தெரியும் கொரோனா காலத்தில் இரண்டாவது தளம் கட்டப்பட்ட போது நிறுவனர் என்று பொய் சொல்லி கல்வெட்டு ஒன்றையும் பதித்துள்ளார் இதையும் உடனடியாக நீக்க வேண்டும்.

6) நமது தஞ்சை ரோடு பள்ளிவாசலுக்கு சொந்தமான கிருஷ்ணாபுரம் முஸ்லிம் தெருவில் இருக்கும் உபைத் கட்டடத்தை தற்காலிக முத்தவல்லி முகமது அன்சாரி இதுவரை வக்பு சொத்தில் இணைக்காமல் ஏமாற்றி பராமரித்து வருகிறார் அந்த சொத்தையும் வக்ஃப் வாரியத்தில் உடனடியாக சேர்க்க வேண்டும்.

7) தஞ்சை ரோடு பள்ளிவாசல் இது வரை நோன்பு கஞ்சி வசூல் ஜும்மா வசூல் பள்ளிவாசல் சந்தா வசூல் 45 ஆண்டுகளாக தற்காலிக முத்தவல்லி முஹம்மது அன்சாரி மற்றும் முஹம்மது மைதீன் இருவரும் முறையாக கணக்கு காட்டியது இல்லை இது இங்கு இருக்கும் மஹல்லாவாசிகள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

8) தஞ்சை ரோடு பள்ளிவாசல் சந்தா என்ற பெயரில் மறைமுகமாக பெண்கள் மதரஸா நிஸ்வான் மதராஸா பெயரில் சந்தா வசூல் செய்து வருகின்றனர் இந்த கணக்குகளை முறையாக தெரிவிக்கவில்லை.

9) தஞ்சை ரோடு பள்ளிவாசல் சொந்தமான கல்யாண மண்டபம் ஆஸ்பத்திரி ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கிருஷ்ணாபுரம் முஸ்லிம் தெருவில் இருக்கும் உபைத் கட்டடத்தை வக்ஃப் சொத்தில் இது வரை சேர்க்காமல் இவர் சொந்தமான சொத்து என்று அபாரிக்க பார்க்கிறார்கள் இதை தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி மொத்த சொத்துக்களை தஞ்சை ரோடு பள்ளிவாசல் வக்ஃப் வாரியத்தில் உடனடியாக சேர்க்க வேண்டும்.

10) தஞ்சை ரோடு பள்ளிவாசல் இது 45 ஆண்டுகளாக எந்த முத்தவல்லி இதுவரை தேர்ந்தெடுக்கவில்லை உடனடியாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லையென்றால் வக்பு வாரியம் (டி எம் ) எடுத்து நேரடி நிர்வாகம் நடத்த வேண்டும்.

11) தஞ்சை ரோடு பள்ளிவாசல் இதுவரை பள்ளிவாசலில் தூய்மை பணியாளர்கள் இல்லை பாத்ரூம் சுத்தம் இல்லை சரியான பாரமரிப்பு இல்லை இதை கண்டித்து தற்காலிக முத்தவல்லி முஹம்மது அன்சாரி மற்றும் முஹம்மது மைதீன் பதவி விலக வேண்டும்.

12) தஞ்சை ரோடு பள்ளிவாசல் இயங்கி வரும் மதராஸாவில் (13.07.2024) ஒத சென்ற எங்கள் வீட்டு பிள்ளைகள் விரட்டி அடிப்பு செய்தார்கள் நாங்கள் முஹம்மது அன்சாரி மனு கொடுத்து எங்கள் அழைத்து விசாரிக்கவில்லை நாங்கள் தவறு செய்த உஸ்தார்கள் நீக்கி விட்டோம் என்று சொல்லி வந்தார்கள் இந்த காரணத்தை வைத்து எங்களுக்கு ஆதரவாக நியாயம் கேட்டு வந்தவர் சபி , அபு , சலீம் , ஓஜிர் பாஷா மற்றும் எனது தம்பி அயூப், ருக்மான் அவர்களின் மீது பொய்யான புகார் மனு DC தலைமையில் முஹம்மது அன்சாரி கொடுத்துள்ளார் அதை AC காவல்துறை ஆய்வாளர் தலைமையில் விசாரித்து வழக்கு இருக்கும் வரை இரு தரப்பினரும் பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். ஆனால் முஹம்மது அன்சாரியும், மைதீனோம் மற்றும் அவருடன் இருக்கும் சில நபர்கள் தூண்டுதல் பெயரில் மீண்டும் மீண்டும் புதிதாக பள்ளிவாசலில் பராமரிப்பு வேலை செய்வதற்கு முயற்சி செய்து கொண்டே வருகிறார்கள் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை காவல் துறை அதிகாரிகள் சட்டபடி நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கு முன் உதாரணமாக முன்னாள் இமாம் பஸும் ஹஜ்ரத் அவர்களை தூண்டிவிட்டு தற்காலிக முத்தவல்லி முகமது அன்சாரி மதுரை நீதிமன்றத்தில் பொய் வழக்கு கெட்ட வார்த்தையில் திட்டியதாக வழக்கு பதிவு செய்திருந்தார் அந்த வழக்கு பொய் வழக்கு என்று மதுரை உயர்நீதிமன்றம் கிளை தள்ளுபடி செய்தனர் இதற்கு இதுவே சாட்சி போதுமானது….

அந்த முக்கிய நபர்கள் முகமது அன்சாரி, முஹம்மத் மைதீன் ,முபாரக் பாய், மன்னனை இஸ்மாயில் , குத்துபுதீன் மற்றும் இதற்கு உடந்தையாக இருப்பவர்களையும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .

13) தஞ்சை ரோடு பள்ளிவாசல் இது மாதிரி எவ்வளவு நபர்கள் கேள்வி கேட்டு இந்த பள்ளிவாசல் எந்த பலன் ஏற்படாமல் அனைவரும் சென்று விட்டார்கள் ஆகையால் இந்த பள்ளிவாசல் நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும் தற்காலிக முத்தவல்லி முஹம்மது அன்சாரி பள்ளிவாசல் கணக்குகளை முறையாக காட்டவில்லை தற்காலிக முத்தவல்லி முஹம்மது அன்சாரி பழக்கடை கணக்குகளை கேட்கவில்லை வக்ஃப் செய்யப்பட்ட பள்ளிவாசல் கணக்குகளை தான் கேட்டு வருகிறோம் என்று ஒரு சிலர் அவர்க்கு துணை செல்லும் நபர்களுக்கு நாங்கள் சொல்லி வருகிறோம்.

குறிப்பு : நாங்கள் மூன்று ஆண்டுகளாக எத்தனை பிரச்சினைகள் வக்ஃப் ஃபோர்டு என்று அலைந்து திரிந்து சென்று நியாயத்துக்காக போராடி வருகிறோம் அல்லாஹ்வின் பள்ளிவாசல் திருடர்கள் கையில் இருந்து மீட்டெடுப்போம் எனது உயிரே போனாலும் நிச்சயம் அல்லாஹ் பள்ளிவாசல் உறுதியாக மீட்டெடுப்போம்….

இதில் இருக்கும் கோரிக்கை தமிழ்நாடு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று எங்கள் தஞ்சை ரோடு பள்ளிவாசல் நியாயம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தஞ்சை ரோடு பள்ளிவாசல் மதரஸா ஓதறதுக்கு இடம் கொடுத்த கிருஷ்ணாபுரம் நடுத்தெரு இருக்கும் வீடு தக்காளி சபி ஒத்திக்கு முஹம்மது மைதீன் கொடுத்துள்ளார் அந்த இடத்தையும் மீட்டு மதரஸா பணியில் நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு : கிருஷ்ணாபுரம் முஸ்லிம் தெருவில் இருக்கும் உபைத் கட்டிடத்தில் பெண்கள் நிஸ்வான் மதராஸா நடக்க வேண்டும் தஞ்சை ரோடு நியூ மாஸ்க் வக்ஃப் பள்ளிவாசல் மட்டும் செயல் பட வேண்டும் இல்லை என்றால் ஆண்கள் மதராஸாவாக செயல்பட தமிழ்நாடு அரசும் வக்ஃப் வாரியம் உடனடியாக தலையிட்டு நல்ல நிர்வாகம் அமைத்து தரும்படி மிக மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *