Advertisement
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாடும் வேலையில் தொடர் மழையால் பண்டிகை காலம் கலையிழந்து காணப்படுகிறது.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 38வது வார்டுக்குட்பட்ட பகுதிகளான அய்யப்பன் நகர், அமராவதி தெரு, திருவள்ளுவர் தெரு கார்னர், LIC காலணியில் பொதுமக்கள் வசிக்கும் வீட்டின் உள்ளேயே மழை நீர், கழிவு நீர் புகுந்து மக்கள் வசிப்பது மிகவும் சிரமம்மாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Advertisement
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேலும் இதே நிலைதான் திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளது எனவும் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Advertisement
Comments