தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது இதனை திரும்ப பெறப்கோரியும், மேலும் மத்திய அரசின் உதய் மின் திட்டத்திலிருந்து தமிழக அரசு வெளியேற கோரியும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் சிறப்பு மத்திய கட்டுப்பாடு குழு உறுப்பினர் செல்வராஜ், AITUC மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் தமிழ்நாட்டில் சிறு குறு நடுத்தர உள்ளிட்ட அனைத்து தொழில்களும் கடும் நெருக்கடியின் மத்தியில் தொழில் செய்ய முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் தொடர்ந்து மின் கட்டண உயர்வு ஏறிக்கொண்டே இருப்பதால் வீடுகள் உட்பட கடும் பாதிப்பை உருவாக்கும் புதிய மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.
மாதாமாதம் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்.தமிழக அரசு மாதா மதாம் மின்கட்டணம் வசூல் செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங் களை எழுப்பினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments