திருச்சியில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று (31.07.2024) மதியம் விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் ரூ 375 கோடியில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பணிகள் ஆய்வு செய்தார். பேருந்து நிலையம் தரைத்தளம் மேல்தளம் என பிரிக்கப்பட்டு அதிநவீன வசதியுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பணிகள் நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து அருகில் சிலரின் மொத்த காய்கறி சந்தை ஆம்னி பேருந்து நிலையம், லாரி நிறுத்தும் முனையம் உள்ளிட்ட பணிகளுக்கான காணொளியை அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் பார்த்தனர்.
புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டிடப் பணிகளை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி பணிகள் குறித்து கேட்டறிந்தார். 70% பணிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் மூன்று மாத காலத்தில் பேருந்து நிலையம் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments