இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் தற்போது ஏதேனும் இந்தியாவிற்கு எதிரான சட்டவிரோத செயலில் ஈடுபட்டுவருகின்றனரா? என்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினர் கண்காணித்துவருகின்றனர்.
அந்தவகையில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பில் திருச்சி கோட்டத் தலைவராக இருந்த அமீர் பாஷா திருச்சி ஜேகே நகரில் தனது தந்தை சர்தார். வீட்டில் வசித்து வந்தார். தற்போது திருச்சி ஏர்போர்ட் சத்தியமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்துவரும் நிலையில் என்ஐஏ அதிகாரிகள் தற்போது அவரது வீட்டில் சோதனையிட்டு வருகின்றனர்.
அமீர்பாஷா திருச்சி காந்திமார்க்கெட்டில் ரெடிமேட் ஷோரூம் வைத்துள்ளார். தொடர்ந்து அவரது செல்போன்களை ஆய்வுசெய்துவந்த உளவுத்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் இன்றையதினம் அவரது வீட்டில் காலை 6:15 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன், என்ஐஏ அதிகாரிகள் அமீர் பாஷா வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட pfi இயக்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோன்று திருச்சி வாழவந்தான் கோட்டையில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் பொறுப்பாளராக இருந்தவரும், தற்போது எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மாவட்ட பொது செயலாளராக இருந்துவரும் சித்திக் என்பவரது வீட்டிலும், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments