திருச்சி மாவட்டம் சீரா தோப்பு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆடி மாத மூன்றாவது வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு 250 கிலோ எடை கொண்ட காய்கறிகள் மற்றும் மலர்கள் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஆலய வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் சிறுமிகள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு அம்மன் போற்றி பாடல்களை பாடியும் திருவிளக்கிற்கு மலர்கள் மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்தும் வழிபாடு நடத்தினர். பின்னர் மூலவரான ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மகா தீபாரணை நடைபெற்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments