திருச்சி காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் இந்த அகன்ற காவிரி ஆற்றை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர். இது மட்டும் இன்றி இந்த காவிரி ஆற்றில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் கீதாபுரம் பகுதியில் காவிரி ஆற்றில் ஓடும் நீரை பார்க்க விராலிமலை சேர்ந்த ரஞ்சித் கண்ணண் அவருடைய உறவினருடன் சென்றுள்ளார். கல்லூரியில் பயின்று வந்த ரஞ்சித் கண்ணனிடம், கீதாபுரத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தகராறு செய்துள்ளனர். வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் ரஞ்சித் கண்ணனை தாக்கி விட்டு 5 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதில் காயமடைந்த ரஞ்சித் கண்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொழுது ரஞ்சித் கண்ணன் மரணம் அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுலுக்கி சுரேஷ் (HS ரவுடி ) நவீன் குமார், விஜய் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments