Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் மழையால் மூழ்கிய நெற்பயிர்களுக்கு 13,500 நிவாரணம் வழங்கப்படவுள்ளது – அமைச்சர் பேட்டி!!

Advertisement

திருச்சி மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக திருச்சி மணிகண்டம், நவல்பட்டு, கள்ளிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்தது. சேத பகுதிகளை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு செய்தனர்.

Advertisement

அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நெற்பயிர் அனைத்தும் சேதம் அடைந்துவிட்டது. உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கள்ளிக்குடியை சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி பேசும்போது….சம்பா பயிர் நீரில் மூழ்கி முளைத்துவிட்டது. “ஏக்கர் ஒன்றுக்கு 32000 ரூபாய் வரை செலவிட்டுவிட்டோம்.தற்போது அறுவடைக்கு மேலும் 10000 ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் எங்களால் அறுவடை செய்ய இயலாது.எனவே தமிழக அரசு உடனடியாக இந்த நெல்லை அறுவடை செய்து முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்” என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

பூங்குடி பகுதியில் பாதிப்படைந்த நெல்வயல்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் வளர்மதி பேட்டியளித்தார்.அதில்…..”திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 43000 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 30000 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல் முற்றி அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. பருவம் தவறி பெய்த தொடர் மழையின் காரணமாக 5000 ஏக்கருக்கு மேல்,

திருச்சி மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியும், பல இடங்களில் நெல் மணிகள் முளைவிட்டு சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த பயிர்கள் பற்றிய கணக்கெடுப்பு பணி வருவாய் துறை, வேளாண்மைத் துறை அலுவலர் கொண்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூபாய் 13500 நிவாரணமாக வழங்கப்பட உள்ளது. பாதிக்கப்பட்ட எந்த ஒரு விவசாயியும் விடுபடாமல் கணக்கெடுப்பு செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்”

Advertisement

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *