திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க ஏற்பாட்டில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட், அருகில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு திருவுருவ சிலை திறப்புவிழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான மகேஸ் பொய்யாமொழி தலைமையில்
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கழக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு முன்னிலையில் இவ்விழாவில் காணொளி மூலம் முத்தமிழறிஞர் சிலையை தமிழ்நாடு முதலமைச்சரும், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் நன்றி கூறினார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments