திருச்சமாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் ஆலத்துடையான் பட்டி ஊராட்சி கல்லாங்குத்து பகுதியில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலத்துடையான்பட்டி கல்லாங்குத்து பகுதிக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தினர் குழாய்கள் மேம்படுத்தும் பணிக்காக பள்ளம் தோண்டிய பொழுது தனி நபர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிக்கப்பட்டிருந்த குழாய்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி பொது மக்களுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் மற்றும் ஆலத்துடையான் பட்டி ஊராட்சித் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments