திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு பழமையான கட்டிடத்தில் மாணவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதனை கண்டித்தும், உடனடியாக கட்டிடத்தை இடிக்க கோரியும் மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் கோரியும்,
அடிப்படை வசதிகள், குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தரக்கூடிய பள்ளிக்கு சொந்தமான இடத்தினை தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறியும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாணவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது காவல்துறையினர் மாணவர்களை தாக்கியதால் மீண்டும் மாணவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் ஜி.கே.மோகன், மாவட்ட தலைவர் சூர்யா, மாவட்ட துணை செயலாளர் ஹரி பிரசாத், மாவட்ட குழு உறுப்பினர் ஸ்ரீநாத், மாவட்ட குழு உறுப்பினர் விஷ்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments