திருச்சி கே.கே நகரை சேர்ந்த பஞ்சாமி மகள் கனிஷ்கா (11). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதி தபால் மூலம் அனுப்பியிருக்கிறார். அதில் கே.கே.நகர் – ஓழையூர் சாலையில் குருஞ்சி நகர் அருகே பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது.
இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தினால் முகம் சுழித்து செல்கின்றனர். மேலும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் குடியிருப்பு வாசிகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே எவ்வித காலதாமதம் இன்றி உடனடியாக இதனை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பள்ளி மாணவி கனிஷ்கா அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments