திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி எம்பி துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர், விமான நிலைய இயக்குனர் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் திருச்சி விமான நிலைய ஓடுதள பாதை விரிவாக்கம் குறித்தும், பயணிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. திருச்சியில் புதிய முனையம் கட்டப்பட்டு விட்டது. ஆனால் ஓடுதள பாதை இன்னும் விரிவுப்படுத்தப்படவில்லை ஓடுதள பாதையை விரிவுப்படுத்தினால் தான் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட முடியும், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவே ஓடுதள பாதைக்கான நிலத்தை கையகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பயணிகள் உடன் வருபவர்களுக்கு கழிவறை வசதி போதுமான வகையில் இல்லை அதை அமைத்து தர வேண்டும் என்பது குறித்தும் கூறினேன். இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்திலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்டோக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே பயணிகள் மற்றும் பயணிகளுடன் வருபவர்களின் வசதிக்காக தற்பொழுது பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்று மூன்று பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
வரும் காலத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப அதன் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடவாவது ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் இது குறித்து இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments