Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையில் இரண்டாம்நிலை காவலர்களுக்கான உடற்தகுதிதேர்வு.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாம் நிலை (Grade-II) காவலர்கள், தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை காவலர் பதவிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற கூடுதல் தேர்வாளர்களுக்கு திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள மொத்தம் 998 தேர்வாளர்களுக்கு அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வில் இன்று கலந்து கொண்ட 284 கூடுதல் தேர்வாளர்களுக்கு 1.சான்றிதழ்கள் சரிபார்ப்பு (Certificate verification) 2.உயரம் மற்றும் மார்பளவு சரிபர்த்தல் (Physical measurement Test) 3.சகிப்புதன்மை சோதனை (Endurance Test) 61601 3 நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த உடற்தகுதி தேர்வின் சிறப்பு மேற்பார்வை அதிகாரியான (Super Check Officer) மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் ஆய்வு செய்தும், பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்கள்.

இதில் தகுதிபெற்ற 167 தேர்வாளர்களுக்கு நாளை மறுநாள் (22.08.24)- தேதி நீளம் தாண்டுதல் (அ) உயரம் தாண்டுதல், 100 மீட்டர் / 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் இத்தேர்வின்போது துணை குழுதலைவர் (Sub-committee Chairman) திருச்சி மாநகர துணை ஆணையர் (வடக்கு) S.செல்வகுமார் உடனிருந்தார்கள்.

மேலும் மீதமுள்ள 498 கூடுதல் தேர்வர்களுக்கு நாளை (21.08.24)-ந்தேதி 1.சான்றிதழ்கள் சரிபார்ப்பு (Certificate verification) 2.உயரம் மற்றும் மார்பளவு சரிபர்த்தல் (Physical measurement Test) 3.சகிப்புதன்மை சோதனை (Endurance Test) என 3 நிகழ்வுகள் நடைபெறும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *