திருநெல்வேலியில் இருந்து செந்தூர் வேலன் டிராவல்ஸ் என்ற ஆம்னி தனியார் பேருந்து திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி சென்றுள்ளது. 27 பயணிகளுடன் சென்னை நோக்கிச் சென்ற இந்த தனியார் பேருந்து, திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தை கடந்த போது திடீரென டயர் வெடித்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனை தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்படட்னர். சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ இல்லை. இதனை தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments