திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் விரகாலூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சூசை அந்தோணி தலைமை தாங்கினார்.
புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், அழகுமணி, மண்டல துணை தாசில்தார் லோபோ ஆகியோர் முன் னிலை வகித்தனர். லால்குடி தாசில்தார் முருகன் வரவேற்று பேசினார். முகாமில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
முகாமில் ஊராட்சி மன்றதலைவர்கள் ஆலம்பாக்கம் தனலெட்சுமி ரவி, திண்ணகுளம் மணிமேகலை அரசகுமாரன், புதூர்பாளையம் நளினி ரவிச்சந்திரன், ஆலம்பாடி அனுப்பிரியா, ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா, முக்கிய பிரமுகர்கள் ஆலம்பாடி முருகன், செல்வராஜ், புதூர்பாளையம் அசோக்,
புள்ளம்பாடி, கல்லக்குடி மின்வாரிய உதவிபொறியாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் விரகாலூர், திண்ணகுளம், ஆலம்பாக்கம், புதூர்பாளையம், ஆலம்பாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு 685 மனுக்களை கொடுத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments