ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் மற்றும் தென்னூர் ஹைரோடு பள்ளிவாசல் டிரஸ்டி போர்டு & ஜமாத் கமிட்டி இணைந்து இன்று மாபெரும் இலவச மருத்துவ முகாம் (31.08.2024) தென்னூர் ஹைரோடு பள்ளிவாசல் வளாகத்தில் நடத்தபட்டது.
இம்முகாமை RMB திருச்சி சேர்மன் கனகராஜ், ரோட்டரி 3000 துணை ஆளுநர் பார்த்தசாரதி ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் தலைவர் முகமது நாசர், செயலாளர் ஜோசப்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக கேஎம்எஸ் பிரியாணி குழுமத்தின் நிறுவனர் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார்.
இந்த இலவச பரிசோதனை முகாமில் பெஞ்ச்மார்க் மெடிக்கல் டிரஸ்ட், நியூரோ ஒன் ஹாஸ்பிடல், ரெத்னா குளோபல் ஹாஸ்பிடல், வாசன் ஐ கேர், ஹேப்பி டென்டல் கேர் நிறுவனம் பங்கேற்று பொதுமக்களுக்கு உயர் இரத்த அழுத்த பரிசோதனை, நீரழிவு பரிசோதனை, இதய பரிசோதனை, நரம்பியல் பரிசோதனை,
எலும்பு அடர்த்தி திரையிடல் & பரிசோதனை, கண், பல் பரிசோதனை, மகளிர் மருத்துவம், காய்ச்சல், இருமல், காது, மூக்கு, தொண்டை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய டானிக், களிம்பு, மாத்திரைகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
இன்றைய முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை டாக்டர் ராமமூர்த்தி, ஜீவானந்தன், முகமது ரியாஸ், மணிகண்டன், வக்கீல் சிவா, கெளதம், சுப்பிரமணி, பிரபாகர், பாண்டியன், அர்ஜுன், அருண் ராஜா, மோகன்ரமணா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments