CIPMMA சிப்மா (இந்திய மருந்து சந்தைப்படுத்துவோர் மற்றும் உற்பத்தியாளர் கூட்டமைப்பு) போன்ற மருந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து உரிமம்/பதிவு வழங்கும் முகாம் திருச்சிராப்பள்ளி தில்லைநகர் கௌரிஷங்கர் உணவகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மேற்கண்ட சங்கத்தின் மாவட்ட தலைவர், M. கோவிந்தராஜன், செயலாளர் K. மகேந்திரன், பொருளாளர் S. குணசேகரன், P.அருண் பிரசாத் (மாநில உயர்மட்ட குழு) மற்றும் A. சுந்தரராஜு (மாநில பொதுச்செயலாளர்) S.பாலாஜி (மண்டல செயலாளர்) முன்னிலையில் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு MBBS DA தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர் இப்ராஹிம் ஏற்பாடு செய்திருந்தார். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் 40 உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதன் மூலம் மாவட்ட நியமன அலுவலர் அவர்கள் கூறுகையில்…. உணவு வணிகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம்/பதிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்றும், ஆண்டு பரிமாற்றம் 12 லட்சத்திற்கு மேல் இருந்தால் உரிமமும் 12 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு துறை 2006-இன் கீழ் பிரிவு 63-படி ரூபாய் 10 இலட்சம் வரை அபராதம் விதிக்ககூடிய தண்டணை ஆகும்.
மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகில் ஏதேனும், சந்தேகத்திற்கு இடமான உணவு பொருள் விற்பனை செய்தாலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு இருந்தாலோ தாங்கள் புகார் அளிக்க வேண்டும் என்றும், தகவல் அளிப்பவரின் விபரங்கள் இரகசியம் காக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள புகார் எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
மாவட்ட புகார் எண் : 96 26 83 95 95
மாநிலபுகார் எண் : 9444042322
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments