Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வ.உ.சி பிறந்தநாள் விழா – மாலை அணிவித்து மரியாதை செய்த திருச்சி எம்பி.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதன் முதலில் சுதேசிக் கப்பலை இயக்கிய, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் 153 -வது பிறந்த நாளில், இன்று (05.09.2024) திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு திருச்சி எம்பி துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது….. நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி சிறை சென்று, அதிக சித்ரவதைகளுக்கு ஆளாகியதால் “செக்கிழுத்தச் செம்மல்” என்று அழைக்கப்பட்டார். ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியதால் “கப்பலோட்டிய தமிழர்” என்று அனைவராலும் புகழப்பட்டார். வைணவம், பௌத்தம், இசுலாம், கிறிஸ்தவம் மதம் சார்ந்த நூல்களை எழுதி அன்றைக்கே மதச்சார்பின்மையின் அடையாளமாகத் திகழ்ந்தார் அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை.

 செல்வச் செழிப்போடு வாழ்ந்த காலத்திலும், சிறைக் கொட்டடியில் வாடிய போதிலும், எல்லாவற்றையும் இழந்து வறுமையில் வாடியபோதிலும், தமிழை மறக்காமல் தமிழ் இலக்கியத் தொண்டு தமது வாழ்வில் ஒரு அங்கமாகக் கருதி, தன்னலமற்ற தேசியத் தலைவராக வாழ்ந்து மறைந்தார் அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். அவருடைய தொண்டும், புகழும் தமிழர்கள் இதயத்திலும், இந்தியர்கள் இதயத்திலும் என்றும் நிலைத்து நிற்கும் என்றேன்.

இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி. டி. சி. சேரன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெயசீலன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பெல்.ராஜமாணிக்கம், தலைவர் வைகோ அவர்களின் உதவியாளர் வெ.அடைக்கலம், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ம.ஜெயபால், தெற்கு மாவட்டப் பொருளாளர் வைகோ பழனிச்சாமி,

மாநகர் மாவட்டப் பொருளாளர் யானை கண்ணன் மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்பீஸ் முத்துக்குமார், எல்லக்குடி அன்புராஜ், ராஜன் பன்னீர்செல்வம், துரை வடிவேல், மலர்விழி ராஜன், பகுதிச் செயலாளர்கள் ஆசிரியர் முருகன், மக்கள் சேவகன் செல்லத்துரை, ஆடிட்டர் வினோத், எப். எஸ். ஜெயசீலன், சென்னை அண்ணா நகர் இராம.அழகேசன், திருவெறும்பூர் சோமு, கோபாலகிருஷ்ணன், கே. பி. மனோகரன்,

ஒன்றியச் செயலாளர்கள் மணப்பாறை வடக்கு சுப்பிரமணியன், அந்தநல்லூர் சாத்தனூர் ஆ.சுரேஷ், திருவெறும்பூர் தெற்கு சி.பீட்டர், மணிகண்டம் வடக்கு க.அண்ணாத்துரை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தினேஷ், மாவட்ட இலக்கிய அணி சுபாஷ் மணி, பகுதி துணைச் செயலாளர் மனோகரன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஆர்.ராமன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜன் தர்மா, ராஜன், செழியன், வட்டச் செயலாளர்கள் ஶ்ரீ சங்கர், சாதிக், இளைஞர் அணி ஹக்கீம், வீரம் விக்னேஷ், தொண்டர் அணி விக்கி,

மாவட்டப் பிரதிநிதிகள் கொத்தட்டை ஜெகதீசன், வைரவேல், மணிகண்டம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட கழக தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *