தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் துவரை முன்னிலை செயல்விளக்க அளித்த வேளாண் மாணவிகள்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் துவரை முன்னிலை செயல்விளக்க அளித்த காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு மாணவிகள் விசாலினி,விக்னேஷ்வரி, அபிநயா, கயல்விழி, ரேணுகா தேவி ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயம் சார்ந்த பல்வேறு களப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி அறிவுரை படி பூனாம்பாளையம் கிராமத்தில் இன்று தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் துவரை முன்னிலை செயல்விளக்க திடல் அமைக்க ஏதுவாக (Poly bag nursery) நாற்றங்கால் அமைத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments