திருச்சி மாநகரில் 242 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த சிலைகள் இன்று மாலை காவிரி ஆற்றில் கரைக்கப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு ஏராளமானோர் கூடுவார்கள் என்பதால் தற்காலிக கழிப்பிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கழிப்பிடத்திலிருந்து வரும் கழிவு நீரை காவிரி ஆற்றி விடுவதற்கு பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இதை கண்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் வேதனையுடன் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். உடனடியாக அதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக கழிப்பிட வசதியிலிருந்து வரும் கழிவுகளை காவிரி ஆற்றில் விடக்கூடாது என வேண்டுகோள் வைத்துள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த கழிப்பிடத்திலிருந்து வரும் கழிவுகளை காவிரி ஆற்றில் விடுவதை நிறுத்மற்றும் வலியுறுத்தியுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments