Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம்

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் தோழர் ப.மாணிக்கம் இல்லத்தில் (09.09.2024) அன்று நடைபெற்றது. மாநில தலைவர் கே.இரவி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் செல்வராஜ் அறிக்கை சமர்ப்பித்தார்.

 நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் :

1) தமிழ்நாடு அரசு தொழிலாளர் கொள்கை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு தொழில்களில் சிறந்த மாநிலமாக விளங்குவதற்காக வேலை முனைவோர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் முதலீடுகளை ஏற்பதற்கும் அவர்கள் இங்கு தொழில்கள் தொடங்குவதற்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு மிகுந்த அக்கறையோடு நடவடிக்கை எடுத்து வரும் அரசை தமிழ்நாடு முதல்வரை பாராட்டும் அதே நேரத்தில் தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக புதிய தொழிலாளர் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும் .

குறைந்தபட்ச கூலி அமல்படுத்துவதற்கும், நிரந்தரமான பணிகளை தனியார் வசம் ஒப்படைக்காமல் இருப்பதற்கும், உரிய காலத்தில் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கும். தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு இருக்கும். தொழிலாளர்களின் வாழ்க்கை உத்தரவாதத்திற்கும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் புதிய தொழிலாளர் கொள்கை மத்திய தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைகளை பெற்று ஏற்படுத்தப்பட வேண்டும் .

2) கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் நடைபெறும் இந்த ஆண்டிலாவது வாரியத்தின் தொடக்க நோக்கமான பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ திட்ட மருத்துவ நிவாரண பலன்கள் கிடைக்கச் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.

3) கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு வீடு அல்லது வீடு கட்ட 4 லட்ச ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கும் முறை மிக எளிமைப்படுத்தப்பட வேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கும் குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகள் இடம்பெறச் செய்ய வேண்டும். இத்திட்டம் உரிய தொழிலாளர்களுக்கு காலதாமதம் இன்றி போய் சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

4) கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்குவது என்ற வாரியத்தின் முடிவை தமிழ்நாடு அரசின் நிதித்துறை ஏற்க மறுத்து மீண்டும் வாரியத்தில் மறுபரிசீலனைக்கு கொண்டு வந்து வாரியம் 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கலாம் என்று ஒருமனதாக முடிவு செய்து அரசுக்கு சமர்ப்பித்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில், இன்னும் அரசு அதன் மீது முடிவெடுக்காமல் 2000 நிதி வழங்காமல் இருப்பது கட்டுமான மூத்த தொழிலாளர்களை மிகுந்த நெருக்கடி ஆளாக்கியுள்ளதால் வாரிய முடிவின் படி உடனடியாக 2000 ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் மாத ஓய்வூதியம் 6000 ரூபாய் வழங்க உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் .

5) கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கட்டுமான தொழில் விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் என்பது முழுமையான நிவாரணம் இல்லை. பணியாளர் இழப்பீட்டு சட்டம் 1923 இன் படி வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் படி முழுமையான பணியிட விபத்து மரணம் பணியிட விபத்து ஊனம் நிவாரணம் வாரியமேவழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து அரசாணை உடனே வெளியிட்டு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

6) வாரியத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணப் பலன்களுக்கு என்ன ஆவணங்கள் வைக்கப்பட வேண்டும் என்கிற விஷயத்தை நலவாரிய கூட்டத்தில் முன்வைத்து முடிவு செய்து அதனை அமுல்படுத்தி திட்ட நடைமுறைகளை எளிமையாக்கி விரைவில் விண்ணப்பித்த தேதியில் 30 நாட்களுக்குள் பண பலன் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாணை மூலம் வெளியிட்டு உதவு வேண்டும்.

7) வரம்பற்ற வெளி மாநில தொழிலாளர்களின் வருகை காரணமாக உள்ளூர் தொழிலாளர்களுக்கு குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு முற்றிலுமாக வேலைய இழப்பு ஏற்பட்டுள்ளது கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் வருமானம் பாதிக்கப்படும் போது கட்டுமான தொழிலாளர் குடும்பங்கள் கடுமையான வறுமையில் சிக்குகிறது. எனவே தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான தொழில்களில் 80 சதம் வேலை இடங்களை தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு ஒதுக்கி உத்தரவாதம் செய்து அரசு சட்டம் இயற்ற வேண்டும் .

8) கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்டப்படியான பலன்கள் வழங்குவது வாரியத்தின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர் சட்டங்களின்படியான பலன்களை வழங்குவதற்கு போதிய நிதி தேவைப்படும் என்கிற அவசியம் கருதி கட்டுமான மதிப்பீட்டில் வசூலிக்கப்படும் ஒரு சத நல வரி என்பதை 10 சத நலவரி என உயர்த்தி வசூலிக்கப்பட வேண்டும் .

9) கட்டுமான தொழிலாளர் வாரியத்தின் கூட்டம் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படவும் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக ஒப்புதல் வழங்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் திருச்சி மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ், வடிவேலன், சங்கர் மேஸ்திரி, மாநில துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி மாநில செயலாளர்கள் துரைசாமி, தில்லைவனம், பாலன், சேது, திருச்சி மாவட்டநிர்வாகிகள் செல்வகுமார், முருகன் உள்பட அனைத்து மாவட்டங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *