திருச்சியில் வெயில் தாக்கம் உள்ள நிலையில் இன்று மதியம் பலத்த காற்று வீசியது. இதனால் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளந்துரைக்கும், முருகன் பேட்டைக்கும் இடையில் உள்ள சாலை ஓரத்தில் இருந்த பெரிய மரமானது சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்களுக்குள் சாலையின் நடுவே கிடந்த மரக்கிளை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சீர் செய்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments