திருச்சி பூசாரி தெரு – சிந்தாமணி பஜார் இடையே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, சிலையின் முன்பாக மதுபோதையில் நடனமாடிய பூசாரி தெரு இளைஞர்களுக்கும், கீழ சிந்தாமணி இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ சிந்தாமணியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், வீரையன், பாண்ட விஜய், மன்னார் தினேஷ், மயில் தினேஷ், யோகேஷ் மற்றும் சிலர் மீதும்,
வெங்கடேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா உள்ளிட்ட விக்னேஷ், பிரசன்னா, நவீன், ஹரி, சுனில், ரமணா, சதீஷ், விக்கி, கோகுல் மற்றும் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வீரையன் (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். எஞ்சிய நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments