திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாரடி, வைரி செட்டிபாளையம், மங்கபட்டி, கட்டபள்ளி, கோனேரிப்பட்டி, உப்பிலியபுரம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
பாஜக திருச்சி புறநகர் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் உமா பாண்டியன் தலைமையில் இந்து முன்னணி அமைப்பினார் ஊர்வலமாக எடுத்து சென்று புளியஞ்சோலை ஆற்றில் கரைத்தினர். முன்னதாக பாஜக மகளிர் அணி திருச்சி புறநகர் மாவட்ட தலைவி கௌரி ஆனந்தன் மற்றும் பொதுச் செயலாளர் சத்யா அஸ்வின் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி திருச்சி புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமல் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் கண்ணன்,
மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பழனிவேல் உள்பட ஏராளமான இந்து முன்னணி அமைப்பினார்கள் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டனர். துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கருப்பண்ணன் ஜெயசீலன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments