Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

50 அடியில் இன்றும் வலிமையுடன் இருக்கும் முகலாயர்கள் படையெடுப்பில் நடப்பட்ட பேரிச்சை மரம்!!

திருச்சியில் மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டி என்ற கிராமத்தில் ஆதிநாயக்க பெருமாள் கோவிலில் நூற்று கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த மிக பெரிய பேரிச்சை மரம் வளர்ந்து நிற்கிறது. இந்த மரம் சுமார் 50 அடி உயரம் இருக்கும். இந்த மரம் இத்தனை ஆண்டுகள் இடி, மழை போன்ற தடைகளை எல்லாம் தாங்கி இன்றளவும் உயிருடன் இருப்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமாக உள்ளது. 

கி. பி. 1323 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் முஸ்லீம் படைகளால் பாதிக்கப்பட்டது. அப்போது சுற்றுவட்ட கிராமங்களே ஸ்ரீரங்கத்திற்கு உதவியாகவும் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த இடமாகவும் விளங்கி வந்தது. அந்த சமயத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டி என்ற கிராமமே வைணவர்களுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பு தலமாக விளங்கி வந்தது.

ஸ்ரீரங்கம் முஸ்லீம் படைகளால் பாதிக்கப்பட்ட சமயத்தில் அங்கு பெருமாளை வழிபட முடியாதவர்கள் கோபுரப்பட்டி ஆதிநாயக்க பெருமாள் கோவிலில் பால சைனத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளையே வழிபட்டனர். அப்பேற்பட்ட கோபுரப்பட்டி கோவிலும் முஸ்லீம் படைகளால் பாதிக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக கோவிலின் வெளியே இந்த பேரிச்சை மரம் உள்ளது.

ஏனென்றால் இந்த படையெடுப்பிற்கு முன்னதான காலகட்டங்களில் தமிழ்நாட்டில் பேரிச்சை மரம் அவ்வளவு பறிச்சயமானதாக இல்லை. இங்கு உள்ள மரம் படையெடுப்பு நிகழ்ந்த சமயத்தில், பேரிச்சை பழத்தை சாப்பிட்டு அதன் விதைகள் முஸ்லிம்களால் இங்கு விதைக்கப்பட்டது என்றும் அரியப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *