திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் பகுதியில் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் அலகின் கீழ் நகர் கிராமம் மகிழம்பாடி சாலை கி.மீ 0/10-இல் நடைபெற்று வரும் உயர்மட்டப் பாலப்பணியினை நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச்செயலாளர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.
இப்பணியினை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது திருச்சி (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப்பொறியாளர் செந்தில், திருச்சி (நெ) நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டப்பொறியாளர் சரவணன், திருச்சி (நெ) தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.
கடந்த மாதம் பெய்த மழையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை அடித்துச் சென்று பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 20 கிலோ மீட்டர் அப்பகுதி மக்கள் சுற்றி சென்றனர் தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தற்காலிக பாலத்தை சீரமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments