திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன் சுந்தர் என்கிற காக்கா என்கிற சுந்தர்ராஜ் (32) சரித்திர பதிவேடு குற்றவாளியான இவன் மீது திருவரம்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
கழுத்தை வெட்டி கொலை செய்யும் எக்ஸ்பர்ட் ஆன இவன் கழுத்து வெட்டி காக்கா சுந்தர் என அடைமொழியுடன் வலம் வந்தான். ரவுடி தனம் செய்து வந்த சுந்தர் ராஜ்அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டு மாடியில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தர்ராஜ் கழுத்து வெட்டுப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளான்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்தில் திருவரம்பூர் டிஎஸ்பி, ஜாஃபர் சித்திக், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்வந்ததை நாய் லீலீ சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது .
மேலும் தடயவியல் நிபுணர் கலைவாணி சம்பவ இடத்தில் தடையங்களை சேகரித்தார். விசாரணையில் கொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரின் தங்கை பரிமளாவுடன் நான்கு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி அவரது மகன்கள் மதி, வடிவேல் மற்றும் பரிமளாவின் மகன் மாரிமுத்து ஆகியோர் சேர்ந்து சுந்தர்ராஜ் கொலை செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கணேசமூர்த்தி (47), மதி (17), வடிவேல் (25) ஆகிய மூவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பரிமளாவின் மகன் மாரிமுத்துவை (25) தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments