திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதா புரத்தை சேர்ந்த மணிகண்டன், கணேசன் இவர்கள் ஆடு வைத்து வளர்த்து வருகின்றனர். இவர்களது ஆடுகள் கீதாபுரம் பகுதி தெருவில் கூட்டமாக நேற்று (13.09.2024) மதியம் 1:30 மணியளவில் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தன.
அப்பொழுது திடீரென ஆடுகள் சத்தமிட்டுள்ளன. ஆட்டை வளர்க்கும் மணிகண்டன் மற்றும் கணேசன் ஆடுகளை வந்து பார்த்து எண்ணி உள்ளனர். அப்பொழுது ஆடு திருடு போனது தெரியவந்துள்ளது. அருகில் விசாரிக்கும் பொழுது திமுக கொடி போட்ட பார்ச்சூனர் காரில் மூன்று பேர் வந்து கூட்டமாக செல்லும் ஆடுகள் பக்கத்தில் ஓரமாக காரை நிறுத்தி கதவை திறந்து முதலில் இரண்டு ஆடுகளை தூக்கி உள்ளே போட்டு உள்ளனர்.
மீண்டும் அந்த தெருவின் வளைவில் குறுக்கே கொண்டு காரை நிறுத்தி மீண்டும் ஒரு ஆட்டை தூக்கி காருக்குள் எடுத்து போட்டு சென்று உள்ளனர். இந்த தகவல் கிடைத்தையடுத்து மணிகண்டனும், கணேசனும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திமுக கட்சி கொடி போட்டு ஆடு திருடும் கும்பல் சிசிடிவி காட்சி மூலம் தெளிவாக தெரிந்து விட்டது.
இந்த காட்சி தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.(திமுக) கொடி போட்ட ஃபார்ச்சூனர் காரில் வந்தவர்கள் மூன்று பேர் யார் என்பது போலீசார் பிடித்த உடன் தான் தெரியவரும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments