ரோட்டரி கிளப் ஸ்ரீரங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கோனார் திருமண மண்டபத்தில் மாபெரும் கண் இலவச சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் 51 பேர் மேல் சிகிச்சைக்காக பேருந்து மூலம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் ஸ்ரீரங்கம் வழியாக வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கான கண் அறுவை சிகிச்சை ஓரிரு நாட்களில் முடிந்து மீண்டும் பேருந்து மூலமாக ஸ்ரீரங்கம் அழைத்து அழைத்து வரப்பட உள்ளனர். மேலும் இந்த நிகழ்வினை இன்று காலை 7 மணி அளவில் ரோட்டரி கிளப் ஸ்ரீரங்கத்தின் தலைவர் Rtn. சேஷாத்திரி, செயலாளர் Rtn. அறிவழகன், ப்ராஜெக்ட் சேர்மன் Rtn. அசோக் குமார் மற்றும்
ரோட்டரி மாவட்டம் 3000 தின் துணை ஆளுநர் Rtn. மைக்கேல் ஜூடி மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிர்வாகிகளோடு இணைந்து தொடங்கி வைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments